'எம் மக்களுக்கு நோய் தீர்ந்து'...'விவசாயி வாழ்வு உயர்ந்து'...'நாகூர் தர்கா'வில் முதல்வர் வைத்த நெகிழ்ச்சி பிரார்த்தனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகூர் தர்காவில் நடந்த சிறப்பு வழிபாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றார். பிரார்த்தனையில் பங்கேற்ற முதலமைச்சருக்குத் தேவாலயம் சார்பில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் வழங்கப்பட்டது. பின்னர் நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் கனமழையால் சேதமடைந்த குளத்தின் சுற்றுச்சுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
மழையால் சேதமடைந்த நாகூர் தர்கா குளத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுச்சுவரைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நாகூர் தர்காவில் நடந்த சிறப்பு வழிபாட்டில் தொப்பி அணிந்தபடி முதலமைச்சர் கலந்து கொண்டார். அங்கு, ''ஆசிய ஜோதி நாகூர் ஆண்டவரிடம் எம் மக்களுக்கு நோய் தீர்ந்து, பேரிடர் அனைத்தும் அகன்று, பாடுபடும் விவசாயி-உழைப்பாளி வாழ்வு உயர்ந்து ,இன்னலற்ற இன்ப வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டு என் பயணம் தொடர்கிறேன்'' என நெகிழ்ச்சியான பிரார்த்தனையை முதல்வர் மேற்கொண்டார்.
ஆசிய ஜோதி நாகூர் ஆண்டவரிடம் எம் மக்களுக்கு நோய் தீர்ந்து, பேரிடர் அனைத்தும் அகன்று, பாடுபடும் விவசாயி-உழைப்பாளி வாழ்வு உயர்ந்து ,இன்னலற்ற இன்ப வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டு என் பயணம் தொடர்கிறேன். pic.twitter.com/ye85JWypi7
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 9, 2020

மற்ற செய்திகள்
