'பாலத்திலிருந்து ரயில் கவிழ்ந்து விபத்து'... 'நடுஇரவில் நடந்த கோர சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Jun 24, 2019 05:13 PM
வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து வடகிழக்கில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி உப்பாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுள்ளது. அப்போது டாக்காவில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குலாவ்ரா பகுதியில் ரயில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த பகுதியில் இருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அந்த ரயிலின் 5 பெட்டிகள் கவிழ்ந்தன.
இதில், ஒரு பெட்டி கால்வாய்க்குள் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சில்ஹெட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதிக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
Tags : #BANGLADESH #ACCIDENT
