“ஒழிஞ்சுதுனு நம்பி பள்ளிகள திறந்தோம்!”.. “அம்புட்டுதேன்.. இப்ப வெச்சு செய்யுது”.. - 'புலி வால புடிச்ச கதையா' திண்டாடி வரும் நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு எடுத்த, பிற உலக நாடுகளிடையே பெரும் கலக்கம் உண்டாகியுள்ளது. ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நகரம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டே வாரங்களில் நகரத்தின் 825 பள்ளிகளில் குறைந்த பட்சம் 40 ஒரு பள்ளிகளில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன.
உள்ளுர் ஊடகங்களின் அறிக்கைப்படி தொடக்க மற்றும் இடைநிலை மற்றும் தொழிற்கல்வி கல்வி என அனைத்து வயதினரும் இந்த கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நோய் பரவலின் விளைவாக நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்படுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று பெர்லினில் உள்ள கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவுவது அரிது என்று முன்னதாக பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் ஜெர்மனியில் நிகழும் இந்த சம்பவங்கள் பிரிட்டனின் சுகாதார அதிகாரிகளின் கூற்றை பொய்யாக்கி இருக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்களில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகளில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. இதேபோல், கோடை விடுமுறைக்குப் பின்னர் ஒரு வாரத்திற்குள் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதுடன், 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் எல்லா நேரங்களிலும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்கிற நிபந்தனையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
