'ஆறு' வருஷம் கழிச்சு பொறந்த 'கொழந்தை'.. எனக்கு 'கொள்ளி' வைப்பான்னு பார்த்தேன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 18, 2019 11:59 PM

பேனர் விழுந்து கடந்த வாரம் சென்னையில் சுபஸ்ரீ(23) இறந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கி எடுத்துள்ளது.இதுதொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

IT Employee Subhasree\'s Grandma talks about her memories

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேனர் வைக்க மாட்டோம் என அரசியல் கட்சித்தலைவர்கள்,நடிகர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.கனடாவுக்கு செல்ல ஆசைப்பட்ட சுபஸ்ரீ தனது கனவு நிறைவேறாமலேயே இறந்து போனார்.

இந்த நிலையில் சுபஸ்ரீயின் பாட்டி இதுதொடர்பாக விகடனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், சுபஸ்ரீ குறித்த சில நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ''திருமணமாகி 6 வருடம் கழித்து பிறந்த குழந்தை சுபஸ்ரீ.என்மேல் அதிகமான பாசம் வைத்து இருந்தாள்.வேலைக்கு கனடா போகவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தாள்.நான் இறந்த பிறகு எனக்கு சடங்கு செய்வாள் என நினைத்து இருந்தேன்.ஆனால் சிறிய வயதிலேயே அவள் இறந்து விட்டாள்,''என துக்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.

Tags : #TECHIEDEATH #SUBHASREE