தேர்தல் முன்னணி நிலவரத்தில் தெரிய வந்துள்ள 'ஷாக்' தகவல்...! '62 தொகுதிகளில் நிலைமை எப்படி வேணும்னாலும் மாறலாம்...' - என்ன காரணம்...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் முடிவுளின் எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் 234 தொகுதிகளில் நடைபெற்ற கடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
காலை 8 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி திமுக 142 தொகுதிகளிலும், அதிமுக 91 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இவற்றில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், திமுக மட்டும் 116 தொகுதிகளில் தனித்து முன்னிலை வகித்து வருகின்றன. ஆட்சியமைக்குத் தேவையான 118 தொகுதிகளைத் தாண்டி திமுக கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது.
என்னதான் முன்னிலையில் இருந்தாலும் அதிமுக கூட்டணி திமுகவை விரட்டிக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். தற்போது மதியம் 12.30 மணி நிலவரப்படி முதல் இரண்டு இடங்களை வகிக்கும் திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகள் 62 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் முன்னிலை வகித்துவருகின்றன.
இப்போதைய நிலையில் சில தொகுதிகளில் வெறும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசம் இருப்பதால், இந்தத் தொகுதிகளின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும் என்றே நிலையே உள்ளது.
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த நிலையில் மீண்டும் 15 ஆண்டுகளாக தொடருமா இல்லை 10 ஆண்டுகள் ஆட்சி களத்தில் இல்லாத திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற முடிவு தெரிய நள்ளிரவு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் பல சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது.