‘4 வயது சிறுமிக்கு பள்ளியில் நடந்த கொடூரம்..’ மருத்துவமனை பரிசோதனையில் தெரியவந்த உண்மை..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 27, 2019 11:07 PM

பஞ்சாப் பள்ளி ஒன்றில் பெற்றோர்-ஆசிரியர் மீட்டிங்கின் போது 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அடுத்த நாள் மருத்துவமனையில் பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது.

school helper rapes 4 y/o girl during parent teacher meeting in punjab

கடந்த சனிக்கிழமை பெற்றோர்-ஆசிரியர் மீட்டிங் முடிந்து தாயுடன் வீடு திரும்பிய சிறுமி வயிற்றில் வலி இருப்பதாகக் கூறியுள்ளார்.  சிறிய வயிற்று வலி என அதைக் கண்டு கொள்ளாமல் விட, அடுத்த நாள் காலையிலும் சிறுமிக்கு வலி இருந்துள்ளது. இதனால் பயந்து போய் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சிறுமியின் தாய்.

பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.  முதல்நாள் மீட்டிங்கின் போது  பள்ளிப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அங்கு வந்த பள்ளியில் வேலை செய்யும் நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இந்த விவரங்கள் தெரியவர, சிறுமியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHILDABUSE #4YEAROLD