எதிர்ப்பை மீறி குஜராத் பெண்ணை மணந்த தமிழக இளைஞர்... திரைப்பட பாணியில் பெண் வீட்டார் செய்த பரபரப்பு சம்பவம்.!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 27, 2023 04:16 PM

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை தமிழக இளைஞர் திருமணம் செய்து கொண்ட சூழலில், பெண் வீட்டார் செய்த காரியம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tenkasi couple marriage and woman family forcibly took daughter

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மாங்கல்யம் தந்துனானேனா".. கே எல் ராகுலை தொடர்ந்து.. படுஜோராக நடந்த பிரபல இந்திய வீரரின் திருமணம்.. வாழ்த்தும் பிரபலங்கள்

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே அமைந்துள்ள கொட்டாங்குளம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகனான வினித் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

வினித்தும் அதே பகுதியை சேர்ந்த கிருத்திகாவும் பள்ளி பருவம் முதலே காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கிருத்திகா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவராவார். இவரது தந்தை நவீன் படேல் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார்.

Tenkasi couple marriage and woman family forcibly took daughter

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, நீண்ட நாள் காதலின் பெயரில், கடந்த சில தினங்கள் முன்பாக நவீன் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டு அதனை சட்ட பூர்வமாகவும் பதிவு செய்து கொண்டதாக தெரிகிறது. மறுபக்கம் பெண் வீட்டாரை எதிர்த்து இந்த திருமணம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், பாதுகாப்பு கேட்டும் வினித் மற்றும் கிருத்திகா ஆகியோர் காவல் துறையினரிடம் மனு அளித்துள்ளனர்.

Tenkasi couple marriage and woman family forcibly took daughter

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, வினித் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் வீட்டில் இருந்த சமயத்தில், கிருத்திகாவின் குடும்பத்தினர் கும்பலாக வந்து அங்கே தாக்குதலில் ஈடுபட பரபரப்பும் உருவானது. அது மட்டுமில்லாமல், அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தி வினித் வீட்டில் இருந்த அவரது மனைவி கிருத்திகாவையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக தூக்கி சென்றதாக தகவல்கள் கூறுகின்றது.

Tenkasi couple marriage and woman family forcibly took daughter

Images are subject to © copyright to their respective owners.

எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவரது வீட்டார் தூக்கி சென்றது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார் வினித். தொடர்ந்து, இதுகுறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கூட அதிக பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது.

Also Read | "இப்படி எல்லாமா கவனம் இல்லாம இருக்குறது".. பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி.. ஒருசில நிமிடத்தில் அரங்கேறிய துயரம்!!

Tags : #TENKASI #COUPLE #TENKASI COUPLE MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tenkasi couple marriage and woman family forcibly took daughter | Tamil Nadu News.