பிரியவே கூடாதுன்னு.. ஒரே ஆணை கரம்பிடித்த இரட்டை சகோதரிகள்.. கடைசில இப்படி ஒரு சிக்கல் வந்திடுச்சே..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jan 27, 2023 04:28 PM

பிரிய கூடாது என ஒரே ஆணை காதலித்துவரும் இரட்டை சகோதரிகள் தற்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

Identical twins attempt to get pregnant at the same time

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | "என்னுடைய இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டி".. கண்ணீருடன் வெளியேறிய சானியா மிர்ஸா.. வீடியோ..!

பொதுவாக இரட்டை குழந்தைகளை வளர்ப்பது சிரமமான காரியம் தான். இரண்டு குழந்தைகளில் வித்தியாசத்தை கண்டுபிடிக்க பெற்றோர் வெவ்வேறு உத்திகளை கையாள வேண்டியது இருக்கும். ஆனால், அப்படியான சூழ்நிலையில் வளரும் இரட்டையர்கள் பொதுவாக வாழ்விலும் ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், ஆஸ்திரேலியாவை இரட்டை சகோதரிகள் ஒருபடி மேலே போய் ஒரே ஆணை திருமணம் செய்துகொள்ளவும் முடிவு எடுத்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் அன்னா மற்றும் லூசி டெசின்க். இரட்டை சகோதரிகளான இவர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் விலகுவது இல்லை. சொல்லப்போனால், இருவரும் குளிப்பது, சாப்பிடுவது ஆகியவற்றையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தது பரவலாக பேசப்பட்டது. இப்படி தங்களுக்குள் விட்டுக்கொடுக்காமல் வாழும் இவர்கள் திருமணத்தால் கூட பிரிய கூடாது என ஒரே ஆணை திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அப்படி, பென் பைரன் என்பவரை இருவரும் காதலித்து வருகின்றனர்.

Identical twins attempt to get pregnant at the same time

Images are subject to © copyright to their respective owners.

தற்போது மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் திருமணம் இன்னும் நடக்கவில்லையாம். காரணம் ஆஸ்திரேலியாவில் பலதார மனம் குற்றம் என்பதால் இந்த தம்பதி திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அன்னா மற்றும் லூசி ஆகிய இருவரும் தாயாக முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், அதுவும் ஒரே நேரத்தில் இருவரும் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பப்படுவதாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு முதல் கர்ப்பம் தரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கும் இந்த சகோதரிகள் வினோதமான காரியம் ஒன்றையும் செய்து வருகின்றனர். அதாவது இவர்கள் இருவரும் ஆளுக்கொரு பொம்மையை எப்போதும் தங்களுடன் வைத்திருக்கின்றனராம்.

Identical twins attempt to get pregnant at the same time

Images are subject to © copyright to their respective owners.

தாய்மையை பற்றி உணர இது தங்களுக்கு உதவியாக இருப்பதாகவும் இந்த சகோதரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், ஒருவருக்கு மட்டும் குழந்தை பிறந்தால் மற்றொருவர் வருத்தப்படுவார் என்பதன் காரணமாகவே ஒரே நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார்கள் இருவரும். இதனிடையே சமூக வலைதள வாசிகள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | ராத்திரியில செல்போனுக்கு சார்ஜ் போட்ட இளைஞர்.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்... பதறிப்போன நண்பர்கள்..!

Tags : #TWINS #PREGNANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Identical twins attempt to get pregnant at the same time | World News.