நடிகர் ரஜினிகாந்த் 'காவேரி' மருத்துவமனையில் அனுமதி...! - 'உடல்நிலை' குறித்து விளக்கம் அளித்த லதா ரஜினிகாந்த்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்ணாத்த பட ட்ரைலர் நேற்று (27010-2021) வெளிவந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் நடித்து சிவா இயக்கியுள்ள திரைப்படமான அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் நேற்று ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது.
அண்ணாத்த பட ட்ரைலரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடிவந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிகியுள்ளது.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த்திற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திருமதி. லதா ரஜினிகாந்த் கூறும்போதும் ரஜினி அவர்களுக்கு வழக்கமாக செய்யப்படும் உடல் பரிசோதனைக்காக தான் சென்றுள்ளதாக கூறியுள்ளார். இன்னும் சில மணி நேரங்கள் அல்லது நாளை காலைக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை மகள், மருமகன், பேரன்களுடன் நேற்று பார்த்து ரசித்த அனுபவத்தின் ஆடியோவும் வெளிவந்துள்ளது. அதோடு, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

மற்ற செய்திகள்
