'மருத்துவமனை' நிர்வாகத்திடம் கேட்டோம், அவங்க 'என்ன' சொன்னாங்கன்னா... - ரஜினிகாந்த் 'உடல்நிலை' குறித்து மருத்துவத்துறை அமைச்சர் தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று (28-10-2021) திடீரென காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுவரையிலும் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்துள்ள பேட்டியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் கூறியுள்ளது.
அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தோம், அவரும் இதே தகவலை உறுதி செய்தார். வழக்கமாக நடைபெறும் சோதனைதான் இது. வருடம் தோறும் நடக்கும் உடல் பரிசோதனை தான் இது என்று அவர் எங்களிடம் தெரிவித்தார்.
பின்னர், நாங்களும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தோம். ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று மருத்துவர்களும் தெரிவித்தனர். அவர் நலமுடன் இருப்பதாகவே நாங்கள் நம்புகிறோம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
