பூங்கொத்தோடு ரஜினி வீட்டுக்குள் போன சசிகலா.. பூரிப்போடு வரவேற்ற குடும்பம்.. என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு பூங்கொத்தோடு சசிகலா திடீரென சென்றார். அவரை பூரிப்போடு ரஜினி குடும்பம் வரவேற்றது. ரஜினியை நலம் விசாரித்த சசிகலா, தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்காக ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா (Sasikala) சென்னை திரும்பினார். சசிகலா சென்னை திரும்பும் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதில் இருந்து மீண்ட சசிகலாவின் உடல்நலம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) அப்போது கேட்டறிந்தார்.
இந்த நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பு முடிந்த பின்னர் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்றார். உடல்நலம் குணமடைந்து நடிகர் ரஜினிகாந்த் சில வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இதனை அடுத்து இன்று (07.12.2021) நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற சசிகலா அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்காக ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து சசிகலா வாழ்த்து கூறினார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடனிருந்தார். திடீரென சசிகலா ரஜினியை சந்தித்து நலம் விசாரித்ததால் போயஸ் கார்டன் கலகலத்து போனது. நடிகர் ரஜினிகாந்த், சசிகலா சந்திப்பு முழுக்க முழுக்க மரியாதை நிமர்த்தமானது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா காலத்தில் எப்போதுமே போயஸ் கார்டன் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் ஜெயலலிதா அங்கு வசித்தார். அப்போது சசிகலாவும் உடன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா போயஸ் கார்டன் பரபரப்பாக இல்லை. மிக அமைதியாக காணப்படுகிறது. இந்த சூழலில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியை சசிகலா சந்தித்ததால் இன்று பரபரப்பாக காணப்பட்டது.

மற்ற செய்திகள்
