பெற்ற மகளிடம் தவறாக நடந்ததாக கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மனைவி..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Aug 21, 2019 11:21 AM
பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி முன்னாள் கணவர் மீது மனைவி அளித்த புகாரில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், தனது கணவர் பெற்ற குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அவரின் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பெண்ணின் முன்னாள் கணவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீது நடைபெற்ற விசாரணையில் அப்பெண் பொய் புகார் அளித்தது தெரியவந்துள்ளது. மேலும் சிறுமி அளித்த வாக்குமூலத்தில் தந்தைக்கு எதிராக பொய்யாக புகார் அளித்துள்ளதை சுட்டிக்காட்டி கணவருக்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விவாகரத்து பெற்றுவிட்டதால் குழந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என நினைத்து மனைவி தனது கணவருக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் பொய் புகார் அளித்த மனைவி மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.