'நன்றாக பழகிவிட்டு ஏமாற்றிய இளைஞர்'... 'விபரீத முடிவு எடுத்த மாணவி'... 'அலறிதுடிக்கும் பெற்றோர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 21, 2019 09:37 PM

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

college girl commit suicide due to love failure in chennai

திருவள்ளூர் அருகே வெள்ளேரிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். இவரது 19 வயதான மகள் நந்தினி, திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இவருக்கும் அதேப் பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தினேஷ் நந்தினியை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, பழகியுள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பம் அடைந்துள்ளார்.

தான் கர்ப்பமடைந்துள்ளதாகவும் உடனே கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என மாணவி கூறியுள்ளார்.  கருவைக் கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார் தினேஷ். இதனைக் கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் கருவை கலைத்துள்ளார் மாணவி. கருவை கலைத்த பின்னும் தினேஷ், மாணவியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தன்னுடைய உறவினர் பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.

இதனை அறிந்து வேதனை அடைந்த நந்தினி, காதலன் தன்னை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி கைவிட்டதால் விரக்தியில் அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கடந்த 17-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். கடைக்கு சென்ற அவரது தாயார், வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அலறிதுடித்த அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த போலீஸ், நந்தினியை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், மணவாள நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #CHENNAI #LOVE #FAILURE