'வாட்ஸப்பில் திறக்கப்பட்ட பள்ளிக்கூடம்...' 'படிப்பு, வீட்டுப்பாடம் எல்லாம் வீட்ல இருந்தே தான்...' கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதால் எடுத்த முடிவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 10, 2020 10:51 AM

கோடம்பாக்கத்தில் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் வாட்ஸப் மூலம் தனது பாடங்களை கற்க துவங்கியுள்ளனர்.

A school that opened in whatsapp to study from home

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்துள்ளது. மேலும் ஒரு சில அரசு பள்ளிகளையும் கொரோனா தடுப்பு வார்டாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டும் வருகிறது. தனியாருக்கு சொந்தமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை விருப்பம் உள்ளவர் தரலாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு முன்பே மாணவர்களின் படிப்பு கெடாதவாறு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த மத்திய அரசு கோரிக்கைவிடுத்தது.

அதனடிப்படையில் தற்போது, சென்னை கோடம்பாக்கத்தில் கில் நகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸப் மூலம் தங்கள் வகுப்புகளை தொடங்கி விட்டனர்.

வாட்ஸப் உதவியுடன் வீட்டிலேயே மாணவர்கள் பள்ளி சீருடைகள் அணிந்து பாடம் படிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவளத்தங்களில் பார்க்கமுடிகிறது. அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்தியப்பின் எப்பொழுதும் போல வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது.

இதை செய்து முடிக்கும் மாணவர்கள் வீட்டுப்பாடத்தை போட்டோ எடுத்து ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆசிரியர்களும் அதை திருத்தி மீண்டும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

வகுப்பு தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே வைக்கப்படுகின்றது.

மாணவர்கள் தேர்வுகளுக்கு தயார் ஆகி கொண்டிருக்கும் இந்த காலங்களில் தற்போது அறிவிக்கப்பட்ட திடீர் விடுமுறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடகூடாது எனவும், அதே நேரத்தில் தரமான கல்வி அவர்களது வீடுகளுக்கே சென்று சேரவேண்டும் என்று கருதியே தற்போது எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

Tags : #SCHOOL