‘10 நிமிஷத்துல 5 பேர் சீரியஸாகிட்டாங்க’.. ‘நான் பயந்துட்டேன்’.. ‘தினமும் அழுதுகிட்டேதான் வீட்டுக்கு போவேன்’.. உருகிய நர்ஸ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 27, 2020 02:06 PM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அமெரிக்க செவிலியர் ஒருவர் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

I saw fear in their eyes New York nurse about Coronavirus patients

சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலால் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது சீனாவை விட அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோன வைரஸ் தாக்கி நூற்றுக்கும் அதிகாமனோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அமெரிக்காவின் நியூயார்க்கில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் மனமுடைந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘என்னால் தூங்க முடியவில்லை. என் மனம் ஒருநிலையில் இல்லை. கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் ஓய்வறைக்கு சென்று கண்ணீர் வடிக்கிறேன். வியர்வையை துடைப்பதற்காக மாஸ்கை அகற்றும்போது என் முகத்தில் இருக்கும் வடுக்களை நான் உணர்கிறேன்.

தினமும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பு எனது பயணம் கண்ணீருடன்தான் இருக்கிறது. நோயாளிகள் இடைவிடாமல் இருமிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்க்கிறது. காய்ச்சல் இருக்கிறது. அவர்களின் கண்களில் பயத்தைப் பார்க்க முடிகிறது. உயிரிழந்தவர்களை எண்ணி நான் அழுதுகொண்டே இருக்கிறேன். 10 நிமிடங்களுக்குள்ளாக 5 நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தோம். நான் பயந்துவிட்டேன். உடனே அழுக ஆரம்பித்துவிட்டேன்.

இது மோசமானது என எங்களுக்கு தெரியும். எங்களால் முடிந்தவற்றை நாங்கள் செய்துவிட்டோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட யாருக்கும் அனுமதி கிடையாது. உங்களுக்கு நெருக்கமானவர்களை அவர்களின் இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கும்போதும் உங்களால் அவர்களுக்கு அருகில் இருக்க முடியாது’ என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

News Credits: Vikatan

Tags : #CORONA #CORONAVIRUS #COVID #NURSES #COVID19USA