‘எனக்கும், தோனிக்கும் இடையில்’... ‘என்ன நடந்ததோ, அதேதான்’... ‘விராட், ரோகித்துக்கும் நடக்குது’...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 30, 2019 03:14 PM
தனக்கும், தோனிக்கும் என்ன நடந்ததோ, அதுவே விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் தற்போது நடப்பதாக அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு கோலி தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை நாங்கள் நல்ல நட்புடன் உள்ளோம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். இருப்பினும் அவ்வப்போது ரோகித் மற்றும் கோலி ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படம் மூலம், அவர்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்று கூறப்பட்டது. ஆனால் களத்தில் இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ‘ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் அந்த நான்கு பேரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் வெளியில் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனைப் போன்று தான் கோலி, ரோகித் விஷயத்தில் ஒன்றாக சாப்பிடவில்லை, ஒன்றாக செல்லவில்லை, ஒன்றாக பார்க்க முடிவதில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள். அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
மேலும் நான் விளையாடியபோது தோனிக்கும், எனக்கும் சண்டை இருந்தது என்று கூறினார்கள். ஆனால் இறுதிவரை நானும், தோனியும் எந்தவித சண்டை மற்றும் பிரச்சனையோ எங்களுக்குள் இருந்ததில்லை. யார் இது போன்ற தகவல்களை கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதெல்லாமே தவறான தகவல்கள் தான். நாங்கள் இருக்கும்போது அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தோம். அதேபோன்று ரோகித், கோலி ஆகியோர் நல்ல ஒற்றுமையோடு இருக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.
