‘70 கிலோ மீன்களில் பார்மலின் தடவி விற்பனை’.. 430 கிலோ கெட்டுப்போன மீன்கள்!.. ‘பீதியை கிளப்பிய மீன் மார்க்கெட்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 06, 2020 11:12 AM

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இருந்து 70 கிலோ வரையிலான மீன்கள் பார்மலின் தடவி விற்கப்பட்டுள்ளன.

70 KG formalin fish & 430 KG Spoiled fish seized, coimbatore

கிட்டத்தடட்ட 430 கிலோவிற்கு கெட்டுப் போன மீன்களை விற்பனை செய்துள்ளதாக, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கோவையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக, அவற்றின் மீது பார்மலின் தடவி விற்கப்பட்டு வருவதாக சில நாட்களாகவே தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதன் அடிப்படையில், மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உருவான தனிப்படை குழுக்கள் நான்காக பிரிந்து களத்தில் இறங்கியது. இக்குழுவினர்தான், கோவையின் முக்கியமான மொத்த மற்றும் சில்லரை மீன் மார்க்கெட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 70 கிலோ மீன்கள் பார்மலின் தடவி விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தவிர 430 கிலோ கெட்டுப்போன மீன்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. மொத்தம் 510 கிலோ மீன்கள். இவற்றை கைப்பற்றி போலீஸார் அழித்தனர்.

பார்மலின் தடவிய மீன்களை உண்டால் வயிற்று வலி மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் வரும் என்பதோடும் இவற்றை தொடர்ச்சியாக உண்டால் புற்றுநோய் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கையை அந்த மார்க்கெட்டில் விநியோகித்த போலீஸார் இப்படியான மீன்களை விற்கக் கூடாது என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.

Tags : #KOVAI #COIMBATORE #FISHMARKET