‘இதை’ பண்ணுங்க... அதிகபட்சமா ‘89 சதவீதம்’ வரை ‘கொரோனா’ பரவலை குறைக்கலாம்’... இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ‘தகவல்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 25, 2020 01:11 PM

மக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தாலே கொரோனா பரவுவதை குறைக்க முடியும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

Coronavirus Lockdown Isolation May Cut Peak Numbers By 89% ICMR

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த 54 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வீட்டுக்குள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தாலே கொரோனா பரவலை குறைந்தபட்சமாக 62% முதல் அதிகபட்சமாக  89% வரை குறைக்கலாம் என  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்திக் கொள்ளுதலை அனைவரும் முறையாகக் கடைபிடிக்கும்போது ஏற்கெனவே வைரஸால் பாதிக்கட்டுள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும், புதிதாக யாரும் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும் எனவும், இந்த தனிமைப்படுத்துதல் என்பது சமூகத்தில் இருந்து மட்டும் இல்லாமல் குடும்பத்தினர்கள் இடையேயும் அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நிலையை எதிர்கொள்ள விழிப்புணர்வு, முறையான பரிசோதனை, லாக் டவுன், தெர்மல் ஸ்கிரீனிங் ஆகியவை அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUS #INDIA #ICMR #LOCKDOWN #ISOLATION