‘இப்படிலாம் பண்ணா’... ‘டிக் டாக் பந்தயத்திற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘இறுதியில் நடந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Mar 26, 2020 06:09 PM

தனக்கு பயம் இல்லை என்பதுபோல், கொரோனா வைரஸ் டிக் டாக் சேலஞ்ச்க்காக கழிவறை இருக்கையை நாக்கால் தொடுவது போன்று வீடியோ பதிவிட்ட இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Influencer who hospitalized with coronavirus after licking

அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தைச் சேர்ந்த 21 வயதான லார்ஸ் (LARZ) என்ற இளைஞர், கொரோனா தொற்றுள்ள நபர்கள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவாது என்று நிரூபிப்பதாகக் கூறி, டிக் டாக்கில் பந்தயம் கட்டிள்ளார். அதற்காக, கழிவறை இருக்கையை (Toilet Bowl)  நாவால் தொடுவது போன்று வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ வெளியானதும் பலரை அதிர்க்குள்ளாக்கிய நிலையில், இங்கிலாந்து ஒளிபரப்பாளர் பியர்ஸ் மோர்கன் உள்பட பலரும் இளைஞரின் முட்டாள்தனத்தை விளாசித் தள்ளியிருந்தனர். மேலும் அவர், ‘இதுபோன்ற பொறுப்பற்ற, மோசமான, சுயநலத்துடன் நீங்கள் நடந்து கொண்டால், கர்மா உங்களை விட்டு வைக்காது’ என்று கூறி, இந்த மாதிரி வீடியோக்களை கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வீடியோ பதிவிட்ட ஒரு வாரத்தில் தமக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை லார்ஸ் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸை உலக நாடுகள் திணறி வரும் நிலையில், வீண் பெருமைக்காக இதுபோன்ற  செயல்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, நல்ல செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

https://www.dailymail.co.uk/news/article-8150945/Influencer-hospital-coronavirus-just-days-posting-video-licking-toilet.html#i-91eed497aa49cf51

Tags : #CORONAVIRUS #LARZ #TITOK #CALIFORNIA