‘இப்டி நடக்கும்னு நாங்க நெனக்கலையே’.. 500 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய பேருந்து..! பயணிகள் பலர் பலியான சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 21, 2019 11:28 AM

இமாச்சல பிரதேசத்தில் பேருந்து ஒன்று 500 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bus accident in Himachal Pradesh

இமாச்சல பிரதேசத்தின் பஞ்சார் என்னும் நகரில் இருந்து கடாகுஷானி என்ற இடத்துக்கு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இதில் பேருந்தில் உள்ளே சுமார் 70 பயணிகள் இருந்துள்ளனர். மேலும், பலர் பேருந்தின் கூரை மீது அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மலைப் பாதையில் பேருந்து சென்றுகொண்டு இருந்துள்ளது. அப்போது ஒரு வளைவில் பேருந்து திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கீழே விழுந்துள்ளது. சுமார் 500 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து விழுந்ததில் 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததகாவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர், மீட்பு குழுவின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த ஓடை ஒன்றை கடக்க மனித சங்கிலி அமைத்து ஒவ்வொருவராக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் பலர் படுகாயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

Tags : #BUS #ACCIDENT #HIMACHALPRADESH