‘மகளின் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்..’ நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 20, 2019 12:46 PM

சேலத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது மகளின் கண்முன்னே தாய் விபத்தில் சிக்கி இறந்த பரிதாபமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

Mother dies in front of her daughter in accident disturbing video

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த கிறிஸ்டி அகஸ்டா ராணி நேற்று மாலை வழக்கம்போல தன்னுடைய மகள் கிரேவியைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளார். தாரமங்கலம் பிராதான சாலையில் இருவரும் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் தாயின் மீது மோதியுள்ளது.

லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர்மீது லாரியின் சக்கரங்கள் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். உடன் வந்து கொண்டிருந்த மகளின் கண்முன்னே நடந்த இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநர் வேலு கிருஷ்ணன் தாரமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விபத்து ஏற்படுத்திய லாரியைப் பறிமுதல் செய்துள்ளனர். மகளின் கண்முன்னே தாய்க்கு நடந்த இந்தக் கொடூரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DISTURBING #ACCIDENT