'எனக்கு எஸ் சொல்லிட்டா'... 'காதலியை கரம் பிடிக்கும் 'பிரபல கிரிக்கெட் வீரர்'... வைரலாகும் போட்டோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jul 02, 2019 10:06 AM

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர், தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Cricketer Karun Nair announced his engagement to girlfriend Sanaya

இந்திய கிரிக்கெட் வீரரான கருண் நாயர் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து அசத்தினார். இந்திய அணிக்காக 6 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கருண், தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெறவில்லை என்ற போதும் ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியை காட்டி வருகிறார்.

இந்நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாகவும், தனது நீண்ட நாள் காதலி சனாயாவை கரம்பிடிக்க இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக நட்பில் இருந்த கருண் நாயரும், சனாயாவும் திருமணம் முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். '' அவள் சம்மதம் தெரிவித்து விட்டாள்' என கருண் பதிவிட்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #TWITTER #CRICKET #KARUN NAIR #SANAYA TAKARIWALA #ENGAGED #GIRL FRIEND #PROPOSAL