திடீரென 'கேப்டனை' அறிவித்த பிரபல அணி... மத்த டீம் 'கேப்டன்'களோட நிலை என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 20, 2019 05:29 PM
ஐபிஎல் ஏலம் முடிந்த கையோடு பஞ்சாப் அணி அந்த அணியின் புதிய கேப்டனாக கே.எல்.ராகுலை அறிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக அஸ்வின் தலைமையில் பஞ்சாப் அணி விளையாடியது. இந்த ஆண்டு பஞ்சாப் அணி அஸ்வினை டெல்லி அணிக்கு விற்பனை செய்தது.
இதனால் அந்த அணியின் புதிய கேப்டனாக யாரை அறிவிக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று ராகுல் தலைமையில் இனி பஞ்சாப் அணி விளையாடும் என்று அறிவித்துள்ளது. இதனால் பிற அணிகளிலும் கேப்டன் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
குறிப்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனை கொல்கத்தா அணி எடுத்ததால் அவரை அந்த அணி கேப்டனாக நியமிக்கலாம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக தினேஷ் கார்த்திக்கே கொல்கத்தா அணியின் கேப்டனாக தொடர்வார் என அந்த அணி அறிவித்துள்ளது.
இதேபோல டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும், ராஜஸ்தான் அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலும், சென்னை அணி தோனி தலைமையிலும், பெங்களூர் அணி விராட் தலைமையிலும், மும்பை அணி ரோஹித் சர்மா தலைமையிலும், ஹைதராபாத் அணி கனே வில்லியம்சன் தலைமையிலும் ஐபிஎல் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது.