“அட அதுக்காகதான் அப்படி செஞ்சேன்"!... வசமாக சிக்கிய இளைஞர் கூறும் காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 08, 2019 05:06 PM

புதுச்சேரியில் காதலியுடன் ஊர் சுற்ற பேக்கரியில் பணத்தை கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

teenage boy steals the money from bakery to buy new bike and jewels

புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் அந்த பகுதியில் கடந்த 5 வருடங்களாக பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (04/05/2019) தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பேக்கரியை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, நேற்று (07/05/2019) இரவு வந்து கடையை திறந்துள்ளார். அப்போது பேக்கரியின் மேல் கூறை பிரிக்கப்பட்டு, கல்லாவில் இருந்த 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணமும், 2 பவுன் தங்க காசு மற்றும் கடையில் உள்ள சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கும் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பேக்கரிக்கு எதிரே பழக்கடை நடத்திவரும்  மதியழகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், காதலியுடன் ஊர் சுற்றுவதற்காகவும், காதலியை மகிழ்விக்க ஒரு லட்சம் மதிப்புடைய ஆடம்பர பைக் மற்றும் காதலிக்கு தங்க சங்கிலியும் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, மதியழகனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஆடம்பர பைக் மற்றும் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

Tags : #PUDUCHERRY #CRIME #TEENAGE BOY #ARRESTED