‘அவரு ரொம்ப நல்லவரு..’ ‘இது எல்லாத்தையும் மீறி இந்தியா வரும்..’ உருகிய பிரபல நட்சத்திர வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 12, 2019 06:39 PM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ள இந்திய அணி வியாழக்கிழமை நியூசிலாந்துடனும், அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுடனும் மோத உள்ளது.

India will win the trophy in world cup Ashwin says with confidence

சென்னையில் கிரிக்கெட் அகாடமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஷிகர் தவான் மிகவும் நல்லவர். அதனால்தான் அவருக்கு நல்ல விஷயங்கள் நடக்கிறது. அவர் ஒரு நல்ல வீரர். அவருடைய உத்வேகமான ஆட்டத்தை இந்தியா நிச்சயமாக மிஸ் செய்யும்” எனக் கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆட்டம் பற்றிப் பேசிய அவர், “நிறைய நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ராகுல் நன்றாக ஃபிட்-இன் செய்வார் என நினைக்கிறேன். நம்ம ஊரைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய்சங்கர் ஆகியோரும் உள்ளனர். யார் யார் விளையாடுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியா எல்லாவற்றையும் மீறி வரும். இந்திய அணி நிச்சயமாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும்” என உருக்கமாகக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவான் எலும்பு முறிவு காரணமாக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #DHAWAN