‘ஆரம்பமே அதகளம் பண்ணிய இந்தியா’.. அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்டை தூக்கி தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட பும்ரா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 05, 2019 04:31 PM

உலகக்கோப்பை லீக் சுற்றுன் 8 -வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க  அணிகள் மோதுகின்றன.

World Cup 2019: Bumrah struck to give India an early breakthrough

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்று இன்று(05.06.2019) இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டு ப்ளிஸிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ஹாசிம் அம்லா களமிறங்கினர்.

இதனை அடுத்து முதல் ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் வீசினார். இதனைத் தொடர்ந்து பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் அடுத்தடுத்த ஓவர்களில் அம்லா(6) மற்றும் டி காக்(10) அவுட்டாகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க கேப்டன் டு ப்ளிஸிஸ் மற்றும் டஷன் ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #BUMRAH #INDVSA #CWC19