'இதுக்கு இவ்வளவு நாள்'...'வெயிட் பண்ண வச்சுட்டீங்களே'...தெறிக்க விட்ட 'நெட்டிசன்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 04, 2019 04:06 PM

உலகக்கோப்பை தொடரானது கடந்த மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது.10 நாடுகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில்,நாளை இந்தியாவின் முதல் போட்டி நடக்கவிருக்கிறது.இந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியினை எதிர்கொள்கிறது.

India gears up for first match, Indian fans mock delay

உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கிய போதும்,இந்திய அணியின் முதல் போட்டி சற்று தாமதமாக தொடங்குவது இந்திய ரசிகர்களை சற்று கடுப்பேற்றியது.இதனால் நாளை நடக்கவிருக்கும் இந்திய அணியின் முதல் போட்டியினை எதிர்பார்த்து கொண்டிருப்பதை குறிக்கும் விதமாக ரசிகர்கள் பலரும் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

இதனிடையே முதலில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம்,இந்திய அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. அதன் பின்பு பங்களாதேஷ் உடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இதற்கிடையே நாளை மாலை 3 மணியளவில் நடக்கும் போட்டியில்,இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியினை எதிர் கொள்கிறது