'உங்களுக்கே இன்னும் கிடைக்கலையா?'... 'எனக்கு 'பாய் பிரியாணி' வேணும்'... 'டாட்' ... பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 05, 2019 02:44 PM

இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதோடு பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும், என தமிழில் அவர் பதிவிட்டுள்ளது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Harbhajan Singh funny tamil biryani and ramzan wish tweet goes viral

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதற்காக மசூதிகளில் இஸ்லாமிய பெரு மக்கள் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.தலைவர்கள் பலரும் ரம்ஜான் பண்டிகைக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே  கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், ‘இல்லாமை ஒழிந்திட , இன்முகமாய் அனைவரும் இருந்திட, இந்த நாள் அனைவருக்கும் இனிமையாய் அமைந்திட இஸ்லாமிய மக்கள் எல்லோருக்கும் உங்கள் நண்பன் ஹர்பஜனின் ரமலான் வாழ்த்துகள். பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போது ஹர்பஜன் பதிவிட்ட பதிவுகள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன.இந்நிலையில் ரம்ஜான் வாழ்த்தும் தமிழிலேயே இருந்ததால்,ஹர்பஜன் சிங் தமிழ்நாட்டின் ஒரு அங்கமாகவே மாறி விட்டார் என அவரது ரசிகர்கள்,பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #CHENNAI-SUPER-KINGS #RAMZAN #HARBHAJAN SINGH #EID MUBARAK