'இந்தியாவோட 'பெஸ்ட்' கேப்டனா தோனி இருக்க காரணம் இது தான்'... 'ரகசியத்தை போட்டு உடைத்த ரோகித்!'... 'அதிர்ந்து போன ரசிகர்கள்'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா பார்த்த ஒரு சிறந்த கேப்டன் தோனி என ரோகித் சர்மா தோனியைப் புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின் இன்று வரை எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. வரும் மார்ச் மாதத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளதால், அதற்கான பயிற்சியில் தற்போது தோனி ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர், ரோகித் சர்மா நேர்காணல் ஒன்றில் தோனியைப் பாராட்டி பேசியுள்ளார். அதில், "தோனி ஒரு கூல் கேப்டன் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தெரியும். அந்த குணம்தான் மைதானத்தில் சரியான முடிகளை எடுக்க வைக்கிறது. ஐபிஎல் உள்ளிட்ட பல கோப்பைகளை வென்ற ஒரு வெற்றிகரமான கேப்டன் தோனி.
ஆட்டத்தின் நெருக்கடியான நேரத்திலும் அமைதியாக இருப்பதே அதற்கு காரணம். பல இளம் வீரர்கள் அழுத்தத்தில் இருக்கும்போது அவர்களை தோனி சரியாக கையாள்வார். அவர்களின் கழுத்தில் கையைப் போட்டுக்கொண்டு சகஜமாக பேசுவார். ஒரு சீனியர் அப்படி பேசும்போது இளம் வீரர்களுக்கு தானாகவே உத்வேகம் வரும். அதனை தோனி செய்வார். இந்தியா பார்த்த ஒரு சிறந்த கேப்டன் தோனி" என புகழாரம் சூட்டியுள்ளார்.
