ஒவ்வொரு மாசமும் 'எக்கச்சக்க' போட்டி... ரொம்ப 'கஷ்டமா' இருக்கு ... 'கேப்டனைத்' தொடர்ந்து வெளிப்படையாக பேசிய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 03, 2020 12:05 AM

இன்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. இதையடுத்து இந்திய அணியின் தொடர் நாயகனாக சிறப்பாக விளையாடி 224 ரன்கள் அடித்த கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

IND Vs NZ: KL Rahul talks about India\'s Tight Schedule

போட்டிக்குப்பின் கே.எல்.ராகுல் பேசுகையில், ''இந்தத் தொடரில் நான் மிகவும் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது இருக்கும்  ஆட்டத்திறனை அப்படியே மேம்படுத்தி, அப்படியே வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் நாங்கள் அதிகளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறோம். இது மிகவும் கடினமான ஒன்று. எனவே அதற்காக நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்,'' என்றார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி முடித்த கையோடு, நியூசிலாந்து சென்று இறங்கியதை குறிப்பிட்டு பேசிய கேப்டன் விராட் கோலி இதுபோன்ற சிரமங்களை பிசிசிஐ கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார். பதிலுக்கு பிசிசிஐ,'' சிரமம் இருப்பதாக தோன்றினால் அவர் அதை முன்னரே தெரிவித்து இருக்கலாம்,'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.