ஒரு பவுண்ட்ரிய தடுக்க இவ்ளோ பெரிய ரிஸ்க்கா..! வேற லெவல் ஃபீல்டிங் செய்து மாஸ் காட்டிய மும்பை வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 02, 2019 11:58 PM

பவுண்ட்ரியை தடுக்க முயற்சி செய்து எதிர்பாரத விதமாக பவுண்ட்ரி லைனுக்கு வெளியே விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Pollard\'s terrific fielding video goes viral

ஐபிஎல் டி20 லீக்கின் 51 -வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் வார்னர் உலகக் கோப்பை பயிற்சிக்காக நாடு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் களமிறங்குகிறார்.

இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர்.இதில் ரோகித் ஷர்மா 24 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த டி காக் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதில் சூர்யகுமார் யாதவ் 23 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை மும்பை குவித்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாகா மற்றும் மார்டின் குப்தில் களமிறங்கினர். அப்போது சாகா அடித்த பந்தை பவுண்ட்ரிக்கு செல்லவிடமால் தடுக்க முயற்சி செய்து எதிர்பாராத விதமாக பவுண்ட்ரி லைனுக்கு வெளியே விழுந்த மும்பை அணி வீரர் பொல்லார்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #ONEFAMILY #ORANGEARMY #POLLARD #MIVSRH