'என்ன தம்பி'...'எங்களுக்கே 'கேட்'போடுறீங்களா'...'களத்தில் சேட்டை'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 02, 2019 11:11 AM

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில்,ரெய்னாவிடம் பண்ட் செய்த சேட்டை தற்போது வைரலாகி வருகிறது.

Rishabh Pant stops Suresh Raina video goes viral

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின.இதில்  டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி சென்னை அணியின் சார்பில் டூ பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆக,அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

அவரைதொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, டூ பிளஸ்சியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனிடையே அதிரடியாக விளையாடிய சுரேஷ் ரெய்னா தனது அரைசதத்தினை பதிவு செய்திருந்த நிலையில்,59(37) ரன்களில் ஆட்டமிழந்தார்.இதனிடையே வாட்சன் தனது விக்கெட்டினை பறிகொடுத்து வெளியேறிய போது ரெய்னா களத்திற்கு வந்தார்.

அப்போது, விக்கெட் கீப்பர் பண்ட், ரெய்னாவுக்கு வழிவிடாமல் ஜாலியாக தடுத்து நிறுத்தினார். பின்னர் ரெய்னாவும்ஜாலியாக அவரை தள்ளி விட்டார்.இந்நிலையில் வீரர்கள் இருவரின் செயலும் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதனை ஐபிஎல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட,அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.