'தலன்னு அழைக்கும்போது.. ரசிகர்களோட அந்த உணர்வு’.. ஃபீல் பண்ணிய கேப்டன் தோனி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 02, 2019 11:02 AM
தல என்று தன்னை அனைவரும் செல்லமாக அழைப்பது பற்றி பேசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி உருக்கமாக பேசியுள்ளார்.

ஃபானி புயல் சென்னைக்கு வர்ல, ஆனா தோனி புயல் சேப்பாக்கத்தை சுழன்று அடித்தது என்று சொல்லும் அளவுக்கு 22 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என மொத்தம் 44 ரன்களை விளாசிய தோனி, ஸ்டெம்பிங்கிலும் எதிரணியை மிரண்டுபோகச் செய்தார்.
டெல்லி அணிக்கு எதிராக அண்மையில் விளையாடி சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி, அபாரமாக வெற்றி பெற்றது. முந்தைய போட்டிகளிலேயே நல்ல புள்ளிகளை பெற்றிருந்த சென்னை அணி, இந்த போட்டியில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பொதுவாகவே தோனியைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் உற்சாகமாகச் சொல்லும் முக்கியமான வார்த்தை தல. தொடக்க கால ஐபிஎல் போட்டிகளில் தோனியை தல என்று குறிப்பிட்டதால், தொடர்ந்து ரசிகர்களால் அந்த பெயர் நிலைபெற்றது. ஆனால் இதுபற்றி பேசிய தோனி,‘தல என்கிற இந்த பெயர் ஸ்பெஷலானது. இந்த செல்லப்பெயர் எனக்கு மிகப்பெரிய ஒன்று.
ஐபிஎல் போட்டிக்காக உருவான பாடல்களில் இந்த பெயர் இடம் பெற்றதை விடவும், தற்போது எங்கே சென்றாலும் என்னை தல என்று ஏன் அனைவரும் ஸ்பெஷலாக அழைக்கிறார்கள் என்று பார்த்தால், உள்ளுக்குள் உருவாகும் வித்தியாசமான இந்த உணர்வை, ஏகோபித்த சிஎஸ்கே ரசிகர்களின் உணர்வாக பார்க்க முடியும். அதை நானும் உணர்கிறேன்’ என்று தோனி கூறியுள்ளார்.
