‘முதல் பந்தே சிக்ஸ் அடித்த கோலி’.. ‘5 ஓவருக்கு 7 விக்கெட்’.. 1 ‘ஹாட்ரிக்’.. மழைக்கு பின் நடந்த பரபரப்பான நிமிடங்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 01, 2019 12:12 AM

மழையால் 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் பெங்களூரு அணி 62 ரன்கள் எடுத்தது.

IPL 2019: Shreyas Gopal\'s Hat Trick helps RR Restrict RCB To 62/7

ஐபிஎல் டி20 லீக்கின் 49 -வது போட்டி இன்று(30.04.2019) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணி பேட்டிங் செய்ய தயாரான நிலையில் திடீரென மழை பெய்ததால் போட்டி தடைபட்டது. இதனை அடுத்து போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் களமிறங்கினர். இதில் முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசி கோலி அதிரடி காட்டினார். கோலி 7 பந்துகளில் 25 ரன்களும், டிவில்லியர்ஸ் 4 பந்துகளில் 10 ரன்களும் அடித்து அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்து வந்த ஸ்டோனிஸும் வந்த முதல் பந்துலே விக்கெட்டாகினார். இதன்மூலம் ராஜஸ்தான் வீரர் ஸ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் அவுட்டாக 5 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 63 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறிக்கிட்டதால் போட்டி முடிவு பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

Tags : #IPL2019 #IPL #RCBVRR #VIRATKOHLI #PLAYBOLD #SHREYASGOPAL