‘தல’இல்லாம 2 மேட்ச்ல தோத்தாச்சு, அடுத்த போட்டியிலயாவது விளையாடுவாரா?.. ரசிகர்களுக்கு பயிற்சியாளர் சொன்ன சீக்ரெட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 01, 2019 01:34 AM

தோனியின் தற்போதைய உடல் நிலை குறித்தும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆடுவாரா என்பது குறித்தும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

IPL 2019: Fleming gives update on MS Dhoni ahead of match against DC

சென்னை அணிக்கு ஆடி வந்த பிராவோ, நடுவில் காயமடைந்து இரண்டு வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்ட பின் அணியில் இணைந்தார். தற்போது சென்னை அணியின் தோனி முதுகு வலியின் காரணமாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. பின்னர் அடுத்த நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி ஆடவில்லை. ஏற்கனவே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த போட்டியில் டெல்லி அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர் கொள்கிறது. இந்த போட்டியில் தோனி ஆடுவாரா என்பது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிபன் பிளெமிங் கூறியுள்ளார். அதில், ‘தோனி தற்போது குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். முழுவதுமாக குணமடைவது குறித்து அணியின் மருத்துவர் பரிசோதித்து வருகிறார். ஆனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாகதான் தோனி விளையாடுவாரா என்பதை கூறமுடியும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #IPL2019 #IPL #CSK #MSDHONI #CSKVDC #YELLOVE #WHISTLEPODU