‘சாரி தோனி’.. ‘ஜென்டில்மேன் கேம்’ என நிரூபித்த மோரிஸ்.. ‘தல’க்கு அப்டி என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 01, 2019 11:23 PM
சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி அணி படுதோல்வி அடைந்தது.

ஐபிஎல் டி20 லீக்கின் 50 -வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இதில் முதுவலியால் இரண்டு போட்டிகளில் விளையாடாத சென்னை அணியின் கேப்டன் தோனி மீண்டும் அணிக்கு திரும்பியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்காளான டு பிளிஸிஸ் மற்றும் வாட்சன் களமிறங்கினர். இதில் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளிஸிஸ் கூட்டணி நிதானமாக விளையாடியது. இதில் ரெய்னா 59 ரன்களும், டு பிளிஸிஸ் 39 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய தோனி(44) மற்றும் ஜடேஜா(25) அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை சென்னை அணி எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 16.2 ஓவர்களின் முடிவில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் வீசினார். அப்போது அந்த ஓவரின் கடைசி பந்து தோனியின் தலைக்கு நேராக சென்றது. உடனே தோனியிடம் இதற்கு மோரிஸ் மன்னிப்பு கோரினார். நடுவர்வரால் அந்த பந்து நோ பால் என கொடுக்கப்பட்டது. அதில் தோனி சிக்ஸர் அடித்தது குறிப்பிடத்தக்கது.
M50: CSK vs DC – MS Dhoni Six https://t.co/VahiyWFVpO via @ipl
— gujjubhai (@gujjubhai17) May 1, 2019
