‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’.. களத்தில் இறங்கிய ‘தல’.. விசில் சத்தத்தால் அதிர்ந்த சேப்பாக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 01, 2019 07:59 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் திரும்பியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2019: MS Dhoni is back to lead CSK

ஐபிஎல் டி20 லீக்கின் 50 -வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் சீசனின் சென்னையில் நடைபெறும் கடைசி போட்டி என்பதால் ரசிகர்களிடையே தோனி விளையாடுவரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில் முதுவலியால் இரண்டு போட்டிகளில் விளையாடாத சென்னை அணியின் கேப்டன் மீண்டும் அணிக்கு திரும்பியத்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளார்

Tags : #IPL #IPL2019 #CSK #MSDHONI #WHISTLEPODU #YELLOVE #CSKVDC