‘தாஹிர் விக்கெட் எடுத்து ஓடும் போது நீங்க என்ன பண்ணுவீங்க’.. ‘தல’ கூறிய கலக்கலான பதில்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 02, 2019 04:59 PM

இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தவுடன் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு தோனி கலக்கலானபதிலளித்து அசத்தினார்.

WATCH: When Tahir celebrates his wicket i am not move, says Dhoni

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

இப்போட்டியில் சுரேஷ் ரெய்னா(59), டு பிளிஸிஸ்(39), ஜடேஜா(25) போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  முதுகுவலியால் இரண்டு போட்டிகளில் தோனி விளையாடவில்லை. அப்போட்டிகளில் சென்னை தோல்வியைத் தழுவியது. இதனை அடுத்து இந்த சீசனில் சென்னை நடைபெறும் கடைசி போட்டி என்பதால், தோனி விளையாடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் இப்போட்டியில் களமிறங்கிய தோனி 22 பந்துகளில் 44 ரன்கள், ஃபினிஷிங் ஷாட், ஸ்டெம்பிங் என அனைத்திலும் அசத்தினார். மேலும் டெல்லியை 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வென்றது.

இதனை அடுத்து போட்டி முடிந்த பின்னர், இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தவுடன் ஓடி கொண்டாடுவதைப் பற்றி தோனியின் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,‘தாஹிர் விக்கெட் எடுத்து ஓடி முடித்து அவரின் இடத்துக்கு வந்தவுடன் நானும், வாட்சனும் சென்று வாழ்த்து தெரிவித்து வருவோம்’ என தோனி கூறியுள்ளார்.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #CSK #YELLOVE #PARASAKTHIEXPRESS #WHISTLEPODU