'கிங்ஸ் லெவன் பஞ்சாப்' அணிக்கு தடையா?...இவரே காரணமாயிட்டாரே...அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 02, 2019 04:44 PM

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா போதை பொருள் வைத்திருந்ததாக ஜப்பான் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதால், பஞ்சாப் அணி சஸ்பெண்டை எதிர்நோக்கி உள்ளது.

BCCI to discuss King XI Punjab fate

இந்தியாவின் பெரும் தொழில் அதிபரும் பாம்பே டையிங், பிரிட்டானியா பிஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிபருமான நுஸ்லி வாடியாவின் மகன் நெஸ் வாடியா,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.இவர் கடந்த மாதம் ஜப்பான் சென்றிருந்த போது போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐபிஎல் நடத்தை விதிகளின்படி அணி நிர்வாகத்தோடு தொடர்புடைய எந்த நபரும் அணியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட கூடாது.அவ்வாறு ஈடுபட்டால் சம்மந்தப்பட்ட அணியினை தடை செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்பு சூதாட்ட புகார்களில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிசிசிஐ அமைப்பின் நிர்வாக கிரிக்கெட் குழு,வரும் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.இதையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தடை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.இந்த விவகாரம் ஐபிஎல் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #IPL #IPL2019 #KINGS-XI-PUNJAB #BCCI #NESS WADIA