‘வார்னருக்கு பதில் மற்றொரு அதிரடி வீரர்’.. மும்பை எதிர்க்க களமிறக்கிய ஹைதராபாத்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 02, 2019 10:12 PM

டி காக்கின் அதிரடியான ஆட்டத்தால் மும்பை அணி 162 ரன்களை குவித்துள்ளது.

IPL 2019: de Kock carries his bat as MI reach 162/5

ஐபிஎல் டி20 லீக்கின் 51 -வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் வார்னர் உலகக் கோப்பை பயிற்சிக்காக நாடு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் களமிறங்குகிறார்.

இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர்.இதில் ரோகித் ஷர்மா 24 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த டி காக் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதில் சூர்யகுமார் யாதவ் 23 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை மும்பை குவித்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #MIVSRH #ONEFAMILY #ORANGEARMY