‘இந்த சும்மா டிரெய்லர் தான்’.. பவுண்டரிக்கு பறக்கவிட்ட ‘சின்ன தல’ அடித்த வேற லெவல் ஷாட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 01, 2019 09:20 PM

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிதனாமாக விளையாடி வருகிறது.

WATCH: Suresh Raina\'s falling shot for boundary

ஐபிஎல் டி20 லீக்கின் 50 -வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் சீசனின் சென்னையில் நடைபெறும் கடைசி போட்டி என்பதால் ரசிகர்களிடையே தோனி விளையாடுவரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில் முதுவலியால் இரண்டு போட்டிகளில் விளையாடாத சென்னை அணியின் கேப்டன் மீண்டும் அணிக்கு திரும்பியத்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். அதன்படி பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கான டு பிளிஸிஸ் மற்றும் வாட்சன் களமிறங்கினர். இதில் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளிஸிஸ் கூட்டணி நிதானமாக விளையாடியது. இதில் ரெய்னா 59 ரன்களும், டு பிளிஸிஸ் 39 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

Tags : #IPL #IPL2019 #CSK #CSKVDC #WHISTLEPODU #YELLOVE #ANBUDEN