‘3 பந்தில் 2 ஸ்டெம்பிங்’.. மின்னல் வேகத்தில் மாஸ் காட்டிய ‘தல’ தோனி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 02, 2019 12:27 AM
சென்னை அணியின் விக்கெட் கீப்பர் தோனி இரண்டும் ஸ்டெம்பிங் செய்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் டி20 லீக்கின் 50 -வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இதில் முதுவலியால் இரண்டு போட்டிகளில் விளையாடாத சென்னை அணியின் கேப்டன் தோனி மீண்டும் அணிக்கு திரும்பியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்காளான டு பிளிஸிஸ் மற்றும் வாட்சன் களமிறங்கினர். இதில் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளிஸிஸ் கூட்டணி நிதானமாக விளையாடியது. இதில் ரெய்னா 59 ரன்களும், டு பிளிஸிஸ் 39 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய தோனி(44) மற்றும் ஜடேஜா(25) அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை சென்னை அணி எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 16.2 ஓவர்களின் முடிவில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி வழக்கம் போல இரண்டு மின்னல் வேக ஸ்டெம்பிங் எடுத்து அசத்தினார்.
WATCH: Do not mess with MSD's gloves 🚨🚨
— IndianPremierLeague (@IPL) May 1, 2019
Full video here 📹📹https://t.co/sMOfRRfxfu #CSK pic.twitter.com/KXtcTcxbca
