‘வெஸ்ட் இண்டீஸை திணறடித்த இளம் வீரர்’... ‘அறிமுகப் போட்டியிலேயே அசத்தல்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 04, 2019 01:06 AM

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரானப் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அறிமுக வீரரான நவ்தீப் சைனி, அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

Saini, Bowlers Shine as India Beat West Indies by 4 Wickets

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,  மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக, அந்த அணியின் துவக்க வீரர்களான ஜான் கேம்ப்பல் மற்றும் ஈவன் லீவிஸ் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் கீரன் பொல்லார்டு (49), நிக்கோலஸ் பூரன் (20) ஆகியோரை தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்தடுத்து அந்த அணி வீரர்கள் வெளியேறியதால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது. அதே போல் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் மற்ற பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்தப்போட்டியில் இந்திய அணி 17.2 ஓவரில், 98 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Tags : #CRICKET #NAVDEEPSAINI #WESTINDIES #INDIA