பேசாம 'அவர்கிட்ட' குடுத்துருங்க... இதுக்கு மேலயும் நீங்க 'கேப்டனா' தொடரணுமா?... வறுக்கும் ரசிகர்கள்... காரணம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 12, 2020 12:14 AM

இன்றைய ஒருநாள் போட்டியில் தோற்று தொடரை இழந்ததை விட, கேப்டன் விராட் கோலியின் மோசமான பார்மே ரசிகர்களை அதிகளவில் ஆதங்கம் கொள்ள வைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடந்த 9 போட்டிகளில் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதேபோல நியூசிலாந்து போட்டியில் 3 போட்டியிலும் சேர்த்து மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்ட்ரைக் ரேட் 25 மட்டுமே வைத்திருக்கிறார்.

IND Vs NZ: Twitter Roasts Kohli, for his worst captaincy

உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என புகழப்படும் கோலியின் இந்த சமீபகால பார்ம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது மட்டுமின்றி கடந்த 1989-ம் ஆண்டிற்கு பின் 31 ஆண்டுகள் கழித்து கோலியின் தலைமையில் இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் அடைந்துள்ளது. இந்த மோசமான சாதனையால் கோலி தன்னுடைய கேப்டன் பதவி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என, ரசிகர்கள் வலியுறுத்த ஆரம்பித்து இருக்கின்றனர்.

ஐபிஎல்லில் கோலி தலைமையின் கீழ் விளையாடும் பெங்களூர் அணி கடந்த 12 வருடங்களில் ஒருமுறை கூட கோப்பை காலமாகவே வெல்லவில்லை. அதே நேரம் ரோஹித் தலைமையில் மும்பை அணி 4 முறை கோப்பை வென்றுள்ளது. இதனால் நீண்ட காலமாகவே ரோஹித்திடம் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரசிகர்கள் அவரை வற்புறுத்தி வருகின்றனர். தற்போது கேப்டனாக மோசமான பல சாதனைகளை கோலி படைத்து இருப்பதால் மீண்டும் கோலியின் கேப்டன் பதவி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.