உண்மையிலேயே 'காயம்' சரியாகிடுச்சா?... அவர 'பார்த்தா அப்டி... சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 11, 2020 11:22 PM

உலகின் அபாயகரமான டெத் பவுலர், உலகின் நம்பர் 1 பவுலர் என புகழப்படும் பும்ராவின் பந்துவீச்சு தற்போது மிகவும் மோசமாக சரிந்துள்ளது. குறிப்பாக ஒருநாள் தொடரில் பும்ரா விளையாடிய விதத்தை பார்த்த ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3 ஒருநாள் போட்டிகளிலும் 30 ஓவர்கள் முழுதாக வீசிய பும்ரா 167 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

IND Vs NZ: Bumrah goes wicket-less for first time in ODI Series

காயத்தில் இருந்து  மீண்டுவந்த பும்ரா தொடர்ந்து விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். இந்தியாவின் இந்த மோசமான தோல்விக்கு பும்ராவின் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணம் என்பதால் ரசிகர்கள் பும்ராவின் காயம் குறித்து தற்போது சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இத்தனைக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற மாட்டேன் என்று அடம்பிடித்து, தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்து அணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் டிராவிட்டுக்கும், பும்ராவுக்கும் சிறு உரசல் கூட எழுந்து, கடைசியில் கங்குலி தலையிட்டு அதை சரி செய்ததாக கூறுவர். இந்த நிலையில் தான் தொடர்ந்து பும்ராவின் பார்ம் மிகவும் மோசமான ஒன்றாக மாறியுள்ளது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் பும்ரா விக்கெட் வேட்டை நடத்துவாரா? இல்லை இதேபோல தான் பந்து வீசி அதிர்ச்சி அளிப்பாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரராகவும் பும்ரா திகழ்கிறார். இவரின் பந்துவீச்சை நியூசிலாந்து வீரர்கள் அடித்து நொறுக்கியது போல, மற்ற வீரர்களும் அடிக்க ஆரம்பித்தால் மும்பை அணியின் நிலை மிகவும் மோசமாக மாறக்கூடும் அபாயம் உள்ளது. எனினும் பீனிக்ஸ் பறவை போல பும்ரா மீண்டெழ வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பும்ரா மீண்டும் பழைய பும்ராவாக மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்களுடன் இணைந்து நாமும் வேண்டிக்கொள்வோம்.