இந்த 'ரணகளத்துக்கு' மத்தியிலயும் ஒரு கிளுகிளுப்பு... சக வீரருடன் இணைந்து செம 'ரொமாண்டிக்' போஸ்...வைரலோ வைரல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சாஹல் அவ்வப்போது, ஏதாவது ஒரு விஷயத்துக்காக எக்கச்சக்கமாக வைரல் ஆவார். சமீபத்தில் கூட அவர் செய்த டிக் டாக் வீடியோ போல ஏராளமான ரசிகர்கள் டிக் டாக் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

அந்தவகையில் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள சாஹல், ''எப்போதும் உனக்கு உறுதுணையாக இருப்பேன்,'' என பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் போட்டிபோட்டு லைக் செய்து வருகின்றனர்.
இதைப்பார்த்த ரோஹித் சர்மா, ''முதலில் நீ உன்னை பார்த்துக்கொள்'' என்று கலாய்க்க, பதிலுக்கு சாஹல், ''இந்த புகைப்படத்தில் நீங்கள் இல்லை என்று பொறாமைப்படாதீர்கள். என்னுடைய அடுத்த புகைப்படத்தில் நீங்கள் நிச்சயம் இருப்பீர்கள்,'' என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
