அவங்க 'ஜெயிச்சது' கூட பரவால்ல... ஆனா நீங்க 'செஞ்சது' தான்... கேப்டனுக்கு 'எதிராக' கொந்தளிக்கும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 11, 2020 06:23 PM

இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. இதனால் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து அணி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

IND Vs NZ: Virat Kohli\'s worst ODI Series, after 5 years

இந்த தோல்வியின் வழியாக இந்தியா எண்ணற்ற மோசமான சாதனைகளை இந்த போட்டியில் படைத்துள்ளது. குறிப்பாக 1989-ம் ஆண்டிற்கு பின் இந்தியா ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் அடைந்துள்ளது. சுமார் 31 ஆண்டுகளுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை 5-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.

கேப்டனாக விராட் கோலி இந்த தொடரில் மிக மோசமான சாதனையை படைத்துள்ளார். 51,15, 9 என 3 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக அவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என புகழப்படும் விராட் கோலி இப்படி பார்ம் இழந்த வீரரைப்போல ரன்கள் அடித்ததை அவரது ரசிகர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடைசியாக 2015-ம் ஆண்டு வங்க தேசம் உடனான ஒருநாள் தொடரின்போது அவரின் ஸ்ட்ரைக் ரேட் 16.33 என்ற மோசமான நிலையில் இருந்தது. 5 வருடங்களுக்கு பின் தற்போது 25 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டை கோலி பெற்றுள்ளார். மேலும் கேப்டனாக சுமார் 31 ஆண்டுகளுக்கு பின் மகா மட்டமான சாதனையையும் அவர் படைத்து இருக்கிறார்.

இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்களே இப்படி செய்யலாமா? என்று கோபமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.