அவரு 'அப்டி' பண்ணதுக்கு...என்ன காரணம்னு 'நாங்க' கண்டு புடுச்சிட்டோம்... மரண கடுப்பிலும் 'கடமை' தவறாத ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 11, 2020 08:55 PM

இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவி அதிர்ச்சியை அளித்தது. இதனால் ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி கேப்டன் கோலி தலைமையின் கீழ் 31 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகி மிகவும் மோசமான சாதனையை படைத்துள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளிலும் கேப்டன் கோலி, ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு காரணம் அவர் பேட்டிங்கிலும் கைகொடுப்பார் என்பது தான்.

IND Vs NZ: Shardul Thakur brutally trolled by Netizens

ஆனால் பேட்டிங்கில் கைகொடுத்த அளவுக்கு கூட பவுலிங்கில் தாகூர் கைகொடுக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. குறிப்பாக இன்றைய ஆட்டத்தில் 17 பந்துகளை மிச்சம் வைத்து நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு தாகூர் தான் காரணம். இவரின் பந்துகளை பவுண்டரி, சிக்ஸ் என வெளுத்தெடுத்த கிராண்ட்ஹோம் 21 பந்துகளில் அதிரடியாக அரைசதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்று விட்டார். 28 பந்துகளில் 58* ரன்களை கிராண்ட்ஹோம் குவிப்பதற்கு காரணமே தாகூர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாகூர் ரன்களை வாரிவழங்க காரணம் விராட் கோலி தான் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ரன் மெஷின் என புகழப்படும் விராட், தாகூரின் பின்னால் செல்வது போல புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இதனால் தான் தாகூர் நியூசிலாந்து அணிக்கு எக்கச்சக்க ரன்களை வாரிவழங்கி விட்டார் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். தாகூருக்கு பதிலாக ஷமியை எடுத்திருந்தால் இந்தியா கண்டிப்பாக ஆறுதல் வெற்றியையாவது பெற்றிருக்கும் என்பது தான் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.