உங்களுக்கு 'சூப்பர் ஓவர்' நடத்தியே... நாங்க 'ஓய்ஞ்சு' போயிட்டோம், அதனால 'நல்லா' கேட்டுக்கங்க... புதிய 'விதிகளை' வெளியிட்ட ஐசிசி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடைசியாக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வைத்து கடைசியில் அதிலும் மேட்ச் டை ஆனதால் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து-இந்தியா இடையிலான டி20 தொடரில் இரு அணிகளும் மாறி,மாறி சூப்பர் ஓவர் விளையாடி ரசிகர்களின் ஹார்ட் பீட்டினை பன்மடங்கு எகிற வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஐசிசி தன்னுடைய விதிகளை மாற்றி அமைத்தது. அதேபோல தற்போது டி20 போட்டிகளுக்கும் ஐசிசி புதிய விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. வருகின்ற தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன்படி ஐசிசியின் புதிய விதிமுறைகளை கீழே பார்க்கலாம்.
1. போட்டி ‘டை’யில் முடிந்தால் சூப்பர் ஓவர் விளையாடப்படும். சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனால், தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும்.
2. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்
3. ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ‘ரிவியூ’ வாய்ப்பு வழங்கப்படும்.
4. சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும்.
5. போட்டியில் 2-வது பேட்டிங் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யும்.
6. முதலில் பீல்டிங் செய்யும் அணி பந்தை தேர்வு செய்யலாம். 2-வது பீல்டிங் செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம். பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டி நடைபெறும் சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
7. பீல்டர்கள் கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதே போன்று இருக்கும்.
8. சூப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள்.