VIDEO: என்ன பாத்து 'எப்டி' நீங்க பேசலாம்?... ஸ்டம்பைத் 'தட்டித்தூக்கி' வழியனுப்பிய வீரர்... வீடியோ உள்ளே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் ஆடாமல் இருந்த கனே வில்லியம்சன் இன்று மீண்டும் களமிறங்கினார். டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் கே.எல்.ராகுல் 112 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களும், மணீஷ் பாண்டே 42 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் மார்ட்டின் குப்தில், நிக்கோலஸ் இருவரும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
— Cricket Lover (@Cricket50719030) February 11, 2020
குப்தில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கனே வில்லியம்சன்(22), ராஸ் டெய்லர்(12) நீசம்(19) ஏமாற்றினாலும் கிராண்ட்ஹோம்(58*),டாம் லாதம்(34*) ரன்கள் குவித்து 47.1 ஓவர்களில் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 300 ரன்கள் விளாசி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்திய அணி பவுலர்களில் சாஹல் மட்டுமே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆறுதல் அளித்தார்.
குறிப்பாக மற்ற பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய குப்தில், சாஹல் பந்தில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒருவேளை குப்தில் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக சதம் அடித்து அசத்தி இருப்பார். முன்னதாக டி20 போட்டியின்போது சாஹலை மொழி தெரியாமல் குப்தில் இந்தியில் திட்டி இருந்தார். அந்த வீடியோ வைரலானது. அதற்குப்பின் இருவரும் நேருக்கு நேர் சந்தித்த இன்றைய போட்டியில் அவரின் விக்கெட்டை சாஹல் துல்லியமாக வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
